Local

உலகம் இன்னும் இரண்டு பேரழிவுகளை சந்திக்க தயாராக வேண்டும்!

உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸை பற்றி 2015-ம் ஆண்டிலேயே பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார்.
அணு ஆயுதங்களை விட சின்ன சின்ன வைரஸ் தான் பேராபத்தை விளைவிக்க போகிறது என்றார்.

அப்போது அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அன்று அவர் சொன்னதை இன்று உலகம் சந்தித்து வருகிறது.

மேலும், கண்ணுக்கு தெரியாத வைரஸ்களால் பல கோடி உயிர்கள் பலியாக நேரும் என்றும் அதனால் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தி வைத்திருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதனிடையே, சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர், சுவாச வைரஸ்கள் ஒவ்வொன்றாக தோன்ற இருக்கிறது. அவை எல்லாம் மிகவும் ஆபத்தானவை.

இன்னும் மனிதர்கள் எதிர்கொள்ள தயாராகாத இரண்டு பேரழிவுகள் வர இருக்கிறது.

அதில், முதலாவது, பருவநிலை மாற்றம். கொரோனாவை காட்டிலும் கூடுதலாக இந்த பருவநிலை மாற்றத்தால் உயிரழப்புகள் ஏற்பட உள்ளது.

மற்றொன்று பயொ தீவிரவாதம், அதாவது ஒரு நாட்டை தாக்க நினைப்பவர்கள், ஒரு வைரஸை உருவாக்குவார்கள். இயற்கையாக தோன்றும் வைரஸ் பாதிப்பை விட இந்த பயொ தீவிரவாதம் அதிபயங்கரமா இருக்கும். என மீண்டும் ஒரு அதிர்ச்சியான எச்சரிக்கை விடுத்துள்ளார் பில்கேட்ஸ்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading