உலகின் கடைசி பாதை எங்கே உள்ளது?:
உலகில் ஆரம்பம் என்று ஒன்று இருந்தால், முடிவு என்றும் இருக்கும். அனைவரும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் செல்வதற்கு சாலை தான் நமக்கு அடித்தளமாக இருக்கிறது.
மண் சாலை இருந்ததை தான் தார் போட்டு சாலையாக அமைத்துள்ளார்கள். அந்த வகையில் உலகின் கடைசி சாலை எங்கே இருக்கிறது என புவியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஐரோப்பாவில் உள்ள ‘E-69 நெடுஞ்சாலை’ நோர்வேயில் அமைந்துள்ளது. இதுதான் உலகின் கடைசி சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய இடத்தை காண ஏராளமானோர் வருகின்றனர்.

உலகின் கடைசி சாலையான நோர்வேயில் உள்ள ‘E-69 நெடுஞ்சாலையில்’ ஒருமுறையாவது நடக்க பலர் விரும்புகிறார்கள். அதாவது பூமத்தியரேகைக்கு மேலே இந்த சாலை அமைந்துள்ளது.
வடக்கு ஐரோப்பாவில் உள்ள Nordkapp ஐ நோர்வேயில் உள்ள Oldafevoord கிராமத்துடன் இணைக்கும் இந்த சாலை 129 கி.மீ. தூரத்தை கொண்டது.
இவற்றில் மிக நீளமான சுரங்கப்பாதை ‘நார்த் கேப்’ ஆகும். ‘நார்த் கேப்’ 6.9 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இந்த ‘நார்த் கேப்’ சுரங்கப்பாதை கடல் மட்டத்திலிருந்து 212 மீட்டர் கீழே உள்ளது.
முடிந்தவரை வட துருவத்திற்கு அருகில் அழைத்துச் செல்லும் சாலை இது என்பதாலே இதனை பூமியின் கடைசி சாலை என்கிறார்கள்.

இந்த சாலையில் செல்ல சில விதிமுறைகள் பின்பற்றுவது கட்டாயமாகும். ஒருவேளை நீங்கள் இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் உங்களால் அந்த வழியில் செல்ல முடியாது.
இந்த சாலையில், காற்று பயங்கர வேகத்தில் வீசுவதாக புவியியல் வல்லுநர்கள் தெரிவித்தனர். கோடை காலத்தில் கூட இந்த சாலையில் பனி பொழியும் என கூறப்படுகிறது.
வானிலை முன்னறிவிப்புகள் இந்த பகுதியில் வேலை செய்யாது என்பதால் எந்த நேரத்திலும் இயற்கை சீற்றம் இந்த இடத்தில் நடைபெறும். இங்கு யாரும் தனியாக செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
1934ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நீண்ட சாலை முழுமை பெற 62 ஆண்டுகள் ஆனது. 1992இல் நிறைவு பெற்ற பிறகு பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

