World

உலகின் முதலாவது தங்கத்திலான தெரு…!!!

துபாய் தேரா பகுதியில் நேற்று ‘கோல்டு டிஸ்ட்ரிக்ட்’ என்ற பெயரில் தங்க வளாகம் அறிமுகம் செய்யப்பட்டமை உலகின் பார்வையை துபாயின் பக்கம் திரும்ப வைத்துள்ளது.

இந்த வளாகத்தில் சுமார் 1,000 நகை வர்த்தக நிறுவனங்கள் தங்கள் நகைக்கடைகளை நிறுவ உள்ளன. இந்தியாவின் பிரபல முன்னணி தங்கம் விற்பனை நிறுவனங்கள் தங்களின் பிரமாண்டமான கிளைகளை அங்கு நிறுவி உள்ளன.

உலகின் முதலாவது தங்கத்திலான தெரு; உலகை திருப்பி பார்க்கவைக்கும் துபாய்! | World S First Street Made Of Gold In Dubai

உலகின் முதலாவது தங்கத்திலான தெரு

இங்கு தங்க நகை வர்த்தக நிறுவனம் மட்டுமின்றி வாசனை திரவியங்கள், அழகு சாதன பொருட்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அலங்கார பொருட்கள் ஆகியவைகளின் விற்பனை நிறுவனங்கள் தங்கள் கடைகளை நிறுவ உள்ளன.

அதேபோல் மிகவும் முக்கியமாக இந்த வளாகத்தில் உலகின் முதலாவது தங்கத்திலான தெரு ஒன்று அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சாலை மற்றும் உள்கட்டமைப்புகள் தங்கத்தில் அமைக்கப்படுமா? போன்ற விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என துபாய் நகை குழும அதிகாரிகள் அறிவித்தனர்.

துபாய் தங்க வளாகத்தின் அறிமுக நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறையின் ஒரு அங்கமான துபாய் விழாக்கள் மற்றும் சில்லரை விற்பனை நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி அகமது அல் காஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘தங்கம் துபாயின் கலாசாரம் மற்றும் வணிக கூட்டமைப்பில் ஆழமாக பிணைக்கப்பட்டுள்ளது.

இது நமது பாரம்பரியம், செழிப்பு மற்றும் நீடித்து கட்டமைக்கும் உணர்வை குறிக்கிறது. இந்த குறிப்பிடத்தக்க திட்டம் மூலம் படைப்பாற்றல் மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த ஒரு சகாப்தம் படைக்க காத்திருக்கிறோம்’’ என்று தெரிவித்தார்

. அதேவேளை உலகில் தற்போது தங்கம் விலையானது பெரும் ஏற்றம் கண்டுள்ள நிலையில் இன்று (28) உலக தங்க விலை 5,250 டொலர்கள் வரை அதிகரித்துள்ளம்ை குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading