World

உலகில் முதல் முறையாக குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி!

உலகில் முதல் முறையாக குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கியூபா தொடங்கி உள்ளது.

கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்துவதற்குப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் 2 வயது முதலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை கியூபா தொடங்கியுள்ளது.

கியூபாவின் மத்திய மாகாணத்தில் முதல் முறையாக நேற்று முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கியூபாவில் அப்டாலா, சோபேரானா ஆகிய கொரோனா தடுப்பூசிகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு உள்ளன. சீனா, ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகளும் குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்த திட்டமிட்ட நிலையில், கியூபா அதனைச் செயல்படுத்தி உள்ளது.

பள்ளிகளை விரைவாகத் திறப்பதற்காகவே இந்த நடவடிக்கையில் கியூபா இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்படாத, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை கியூபா செலுத்தி வருகிறது என செய்திகள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading