World

உலக சாதனை படைத்த மின்னல் பதிவு ஐ.நா.சபை தெரிவிப்பு!

கடந்த 2020 ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி அமெரிக்காவின் தென் பகுதி வானில் வெளிப்பட்ட ஒரு மின்னலின் பதிவு புதிய உலக சாதனை படைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மிசிசிப்பி, லூசியானா மற்றும் டெக்சாஸ் முழுவதும் மொத்தம் 770 கிலோமீற்றர் தூரம் இந்த மின்னல் தெரிந்ததாகவும் ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பு ஓர் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இது இங்கிலாந்தின் லண்டன் நகரிலிருந்து ஜெர்மனியின் ஹம்பர்க் நகரம் வரை உள்ள தூரத்துக்குச் சமமானது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஒக்டோபர்  31ஆம்  திகதியன்று தெற்கு பிரேஸில் பகுதியில் பதிவான ஒரு மின்னலின் தூரத்தை விட 60 கிலோமீற்றர் அதிகமாக அமெரிக்க மின்னல் பதிவாகி உள்ளது. 

இது இயற்கை நிகழ்வுகளின் அசாதாரண பதிவுகள் என ஐ.நா.வானிலை மற்றும் கால நிலை அதிகாரி ராண்டால் செர்வெனி தெரிவித்துள்ளார்.

மின்னலின் நீளம் மற்றும் கால அளவைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் அண்மைய ஆண்டுகளில் வியத்தகு முறையில் மேம்பட்டுள்ள தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading