Sports

4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கத்திய தீவுகள் வீரர் சாதனை!

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஹோல்டர் ஹட்ரிக் விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்றார்.

மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து அணிகள் மோதிய 5-வது டி20 போட்டி பார்படாசில் நடைபெற்றது. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 179 ஓட்டங்கள் எடுத்தது. பொல்லார்டு 41 ஓட்டங்களும், பாவெல் 35 ஓட்டங்களையும் எடுத்தனர்

அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 162 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. ஜேம்ஸ் வின்ஸ் 55 ஓட்டங்களையும், சாம் பில்லிங்ஸ் 41 ஓட்டங்களுக்கும் அவுட்டாகினர். ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஜேசன் ஹோல்டர் 4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதனால் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி 3-2 என டி20 தொடரை கைப்பற்றியது. மேற்கிந்திய தீவுகள் சார்பில் ஹோல்டர் 5 விக்கெட்டும், ஹொசைன் 4 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இந்நிலையில், டி20 போட்டிகளில் 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய நான்காவது வீரர் ஜேசன் ஹோல்டர் ஆவார்.

இவருக்கு முன்னதாக, அயர்லாந்தின் காம்பெர், இலங்கையின் லசித் மலிங்கா மற்றும் ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் ஆகியோர் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading