Sports

உலக டெஸ்ட் தரவரிசையில் இலங்கை வரலாறு காணாத வீழ்ச்சி

மெதுவான ஓவர் வீதம் காரணமாக இலங்கை அணிக்கு உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் (WTC) புள்ளிகளில் 15 புள்ளிகள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட ஓவர் வீதத்தைப் பூர்த்தி செய்யத் தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கும் அபராதம்

இதன்படி,  இலங்கை 15 புள்ளிகளை இழந்து 7ஆவது இடத்திலிருந்து 8ஆவது இடத்திற்குச் சரிந்துள்ளது.

அத்துடன், இலங்கையின் புள்ளி சதவீதம் 33.33வீதத்திலிருந்து 15.47வீதமாகக் குறைந்துள்ளது.

உலக டெஸ்ட் தரவரிசையில் இலங்கை வரலாறு காணாத வீழ்ச்சி | Sri Lanka Suffers Drop In World Test Rankings

பாகிஸ்தான் அணிக்கும் 5 புள்ளிகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் 3.33புள்ளி சதவீதத்துடன் 9ஆவது இடத்தில் நீடிக்கிறது. இந்த அபராதம் நடப்பு WTC தொடரில் இலங்கையின் முன்னேற்ற வாய்ப்புக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading