Lead News

உலக தரவரிசையில் முன்னேற்றம் கண்ட இலங்கை கடவுச்சீட்டு

இலங்கை கடவுச்சீட்டு உலக தரவரிசையில் ஒரு பெரிய முன்னேற்றத்தை அடைந்து ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் 96 வது இடத்திலிருந்து 91 வது இடத்திற்கு ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளது.

ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு 2025,இன்படி முன் விசா இல்லாமல் தங்கள் பிரஜைகள் நுழையக்கூடிய இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாடுகளை தரவரிசைப்படுத்தியுள்ளது.

ஜப்பான் மற்றும் தென் கொரியாவின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 190 நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

இந்தியா எட்டு இடங்கள் முன்னேறி, 85வது இடத்திலிருந்து 77வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.

வெளியிடப்பட்ட சமீபத்திய உலகளாவிய தரவரிசைப்படி, ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டு 2025 இல் பாகிஸ்தானின் கடவுச்சீட்டு தொடர்ந்து கீழே உள்ளது.எனினும் ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானை விட முன்னணியில் உள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading