Lead News

உலக நாடுகளிடம் கையேந்தப் போகும் அமெரிக்கா..!!

அமெரிக்க அரசாங்கத்தின் மொத்தக் கடன் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் $40.05 டிரில்லியன் என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் $19.4 டிரில்லியனாக இருந்த கடன் தற்போது இருமடங்காக அதிகரித்துள்ளது,

உண்மையில் $40 டிரில்லியன் என்பது எவ்வளவு தொகை?

அமெரிக்காவில் உள்ள ஒட்டுமொத்த தனிநபர் வீடுகளின் (Single-family homes) மொத்த சந்தை மதிப்பை விட இந்த கடன் தொகை அதிகம்.

அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (GDP) ஒப்பிடுகையில், நாட்டின் கடன்-GDP விகிதம் 125.8% ஆக உள்ளது. அதாவது, அமெரிக்கா ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யும் ஒட்டுமொத்த மதிப்பை விட அதிக கடனில் தத்தளிக்கிறது.

கடன் இந்த அளவுக்குக் குவியக் காரணம் என்ன?

2008-2009 உலகப் பொருளாதார மந்தநிலை மற்றும் 2020 கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் வழங்கப்பட்ட பிரம்மாண்ட நிவாரண நிதி ஒதுக்கீடுகள் உட்பட

கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார அதிர்வுகளைச் சமாளிக்கத் திட்டமிடலின்றி பெருமளவில் டாலர்கள் புழக்கத்தில் விடப்பட்டதும், தொடர்ச்சியான பற்றாக்குறை பட்ஜெட்களும் நாட்டின் நிதிச் சுமையை விண்ணைத் தொடச் செய்துள்ளன.

உக்ரைன் போர், ஈரான் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியப் பதற்றங்கள் உள்ளிட்ட சர்வதேசப் பூசல்களுக்கு வழங்கப்பட்டு வரும் பெரும் நிதி மற்றும் ராணுவ உதவிகள் அமெரிக்காவின் treasury யை வெகுவாகக் கரைத்துள்ளன.

ஒருபுறம் போர்கள் மற்றும் உள்நாட்டுத் திட்டங்களுக்கான கட்டுப்பாடற்ற செலவினங்கள் அதிகரிக்க, மறுபுறம் வருவாயைக் குறைக்கும் வரிச்சலுகைக் கொள்கைகள் நிதிப் பற்றாக்குறையை வரலாறு காணாத நிலைக்குத் தள்ளியுள்ளன.

இது உலகளவில் அமெரிக்க டாலரின் மேலாதிக்கத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் டாலர்களை அச்சிட்டு புழக்கத்தில் விட்டதும், மலைபோல் குவிந்துள்ள $40 டிரில்லியன் கடனும் அமெரிக்க நாணயத்தின் மீதான சர்வதேச நம்பிக்கையைக் குறைத்து வருகின்றன.

உலக அளவில் ஜப்பான் (204%), சிங்கப்பூர் (172%), சூடான் (169%), பஹ்ரைன் (152%), இத்தாலி (138%), கிரீஸ் (137%), செனகல் (132%), மாலத்தீவு (129%) ஆகிய 8 நாடுகள் மட்டுமே அமெரிக்காவை விட அதிக கடன்-GDP விகிதத்தைக் கொண்டுள்ளன.

ஜப்பானின் கடன் பெரும்பாலும் அந்நாட்டு உள்நாட்டு வங்கிகளிடமே உள்ளது. ஆனால் அமெரிக்காவின் கடனில் பெரும் பகுதி சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாடுகளிடம் இருப்பதால், நிதி நெருக்கடி ஏற்படும்போது அந்நிய முதலீட்டாளர்கள் பத்திரங்களை விற்று வெளியேறும் அபாயம் அதிகம்.

அமெரிக்கா தனது வாங்கிய கடனுக்கு செலுத்தும் வட்டி மட்டுமே, அந்நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்புத் துறை செலவு மற்றும் முதியோர் மருத்துவக் காப்பீட்டு (Medicare) செலவுகளை விட அதிகமாகிவிட்டது.

தற்போதைய போக்கைத் தொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் கடன் $50
டிரில்லியனை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் டாலர்களை அச்சிட்டு புழக்கத்தில் விட்டதும், மலைபோல் குவிந்துள்ள $40 டிரில்லியன் கடனும் அமெரிக்க நாணயத்தின் மீதான நம்பிக்கையைக் குறைத்து வருகின்றன..

சர்வதேச டாலரின் மதிப்பு வீழ்ச்சியடையும் அபாயத்தை உணர்ந்துள்ள பல நாடுகள் தங்களது அந்நியச் செலாவணி கையிருப்பில் டாலரின் பங்கைக் குறைத்து, தங்கம் மற்றும் மாற்று பிராந்திய நாணயங்களில் வர்த்தகம் செய்வதை தீவிரப்படுத்தியுள்ளன.

அமெரிக்கக் கருவூலப் பத்திரங்களின் மதிப்பு சரிந்து வருவதால், சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு மத்திய வங்கிகள் அமெரிக்கக் கடன்களில் முதலீடு செய்வதைத் தவிர்க்கத் தொடங்கியுள்ளன.

வாங்கிய கடனுக்கான வட்டி மட்டுமே அமெரிக்காவின் ஒட்டுமொத்த பாதுகாப்புத் துறை பட்ஜெட்டை விட அதிகமாகியுள்ளது. இது டாலரின் நிதி அடித்தளத்தையே உலுக்கியுள்ளது.

இருதரப்பு வர்த்தகங்களில் டாலருக்குப் பதிலாக சொந்த நாணயங்களைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதால், சர்வதேச வர்த்தக நாணயம் என்ற டாலரின் தனித்துவ அந்தஸ்து சரிவைச் சந்திக்கும் சாத்தியக்கூறுகள் வலுத்துள்ளன.

வெளியுறவுக் கொள்கைகள், போர்ச் செலவுகள் மற்றும் கட்டுப்பாடற்ற நிதி நிர்வாகத்தில் அமெரிக்க அரசு உடனடியாகக் கடுமையான மாற்றங்களைச் செய்யாவிட்டால், தவிர்க்க முடியாத மாபெரும் பொருளாதார பின்னடைவை
அமெரிக்க வல்லரசு சந்திக்க நேரிடும்.

அத்துடன் சர்வதேச நிதிச் சந்தையில் டாலரின் வீழ்ச்சியும் dedollarisation செயல்முறையும் மேலும் தீவிரமடைவதைத் தவிர்க்க முடியாது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading