World

400 ஆண்டுகளுக்குப் பிறகு உலக வரைபடத்தில் ஏற்படப்போகும் மாற்றம்..!!

ஐரோப்பாவை பெரிதாகக் காட்டிய பொய்! 400 ஆண்டுகளுக்குப்பின் உலக வரைபடத்தில் ஏற்படும் மாற்றம்

உலகத்தை அதன் உண்மையான அளவிலும் நிலையிலும் காட்டும் புதிய உலக வரைபடத்தை ஐக்கிய நாட்டு நிறுவனம் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. உலக வரைபடத்தில் பல நூற்றாண்டுகளாகத் தொடரும் தவறான பிம்பங்களை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இதன் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்திற்கு ஆதரவாக மொத்தம் 164 நாடுகள் வாக்களித்தன. உலகளாவிய நாடுகளின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இந்த முடிவை சர்வதேச சமூகம் வரவேற்றுள்ளது.

எனினும், இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா மட்டுமே எதிர்த்து வாக்களித்தது. மற்ற நாடுகளின் ஏகமனதான ஆதரவுக்கு மத்தியில் அமெரிக்காவின் இந்த எதிர்ப்பு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த 400 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் தற்போதைய உலக வரைபடம் தவறான தகவல்களைத் தருவதாக ஆப்பிரிக்க நாடுகள் குற்றம்சாட்டின. குறிப்பாக, காலங்காலமாகத் தொடரும் இந்தத் தவற்றை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என அவை தீவிரமாக வலியுறுத்தி வந்தன.

தற்போது வழக்கத்தில் உள்ள உலக வரைபடம் கடந்த 15ஆம் நூற்றாண்டில், அதாவது 1569ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ‘மெர்கேட்டர்’ (Mercator) முறையாகும். இதில் பூமத்திய ரேகையிலிருந்து தூரமாக அமைந்துள்ள ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா போன்ற பகுதிகள் மிகப் பெரிதாகக் காட்டப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன் காரணமாக கிரீன்லாந்து தீவு ஆப்பிரிக்கா அளவுக்குப் பெரிதாக வரைபடங்களில் சித்தரிக்கப்படுகிறது. ஆனால், உண்மையில் ஆப்பிரிக்கக் கண்டமானது கிரீன்லாந்தைவிட சுமார் 14 மடங்கு மிகப்பெரியது என்ற உண்மையை ஐ.நா.வின் புதிய தீர்மானம் ஏற்றுக்கொண்டுள்ளது

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading