Local

ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்களில் சிக்கிய அமைச்சர்களின் விபரங்களை உடன் அம்பலப்படுத்துக! – மஹிந்த வலியுறுத்து

தற்போது நாடு மிகவும் வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொஸ்கம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். .

ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்கள் உள்ள அமைச்சர்களின் விபரங்களை வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நில்வளா திட்டத்தில் கொமிஷன் பணம் கேட்ட இரு அமைச்சர்கள் பற்றிய விபரம் தெரியவந்துள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்துக்குப் பதிலளிக்கும் வகையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசைப் பற்றி பொய்யான கதைகளைத் தயாரிக்க எவ்வித அவசியமும் இல்லை எனவும், அவர்களது செயல்கள் தொடர்பில் கருத்து தெரிவித்தால் மட்டுமே போதுமானது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading