World

எகிப்தில் தமிழ் கல்வெட்டு – சுவிஸ் ஆய்வாளர் தகவல்

 

சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு, எகிப்தில் உள்ள பரோவின் பாறை வெட்டிக் கட்டப்பட்ட கல்லறைகளைப் பார்வையிட்ட ஒரு தமிழ் வணிகர், தனது பெயரை அங்கு உள்ள ஆறு கல்லறைகளில் ஐந்தில், மொத்தம் எட்டு இடங்களில் பொறித்திருந்தார். இக்கல்லறைகள் கி.மு. 1600 காலத்தைச் சேர்ந்தவை. ஆனால், அவரது பெயர் சமீபத்தில் சுவிற்சர்லாந்து ஆய்வாளர் இங்கோ ஸ்ரஅகுக் (Ingo Strauch) கண்டுபிடிக்கும் வரை யாருக்கும் தெரியவில்லை.

“சிகை கொற்றன்” (Cikai Korran) என்ற பெயர் தமிழ்ப் பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் சிகை என்பது முடி அல்லது கிரீடம் என்று பொருள்; கொற்றன் (Kotran) என்பது தலைவர் என்று பொருள். இந்தப் பெயரும், மேலும் சில பெயர்களும் மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் இருந்ததற்கும், பண்டைய வர்த்தகப் பாதைகள் வழியாக தமிழ் வணிகர்கள் பயணம் செய்ததற்கும் புதிய ஆதாரமாகக் கருதப்படுகின்றன.

இங்கோ ஸ்ட்ராக், மற்றும் பிரெஞ்சு ஆசிய ஆய்வு நிறுவனம் (École Française d’Extrême-Orient – EFEO) சார்ந்த ஷார்லட் ஷ்மிட் (Charlotte Schmid) ஆகியோர் இந்த கல்வெட்டுகளைப் படித்து விளக்கினர். அவர்கள் இந்த ஆய்வை சென்னை நகரில் நேற்று புதன்கிழமை (11.02.2026) நடைபெற்ற தமிழ் கல்வெட்டியல் (epigraphy) மாநாட்டில் ஆய்வுக்கட்டுரையாக சமர்ப்பித்தனர்.

#Egypt #tamil #pyramids #brami #கல்வெட்டு #தமிழ் #BreakingNews #epigraphy

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading