இறந்த பிறகு மனித மூளையில் நடப்பது என்ன?
மரணத்திற்குப் பின் மனித மூளையில் நடப்பது என்ன? விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!
மனிதன் இறந்த பிறகும் அவனது மூளை ஒரு குறிப்பிட்ட நேரம் வரை செயல்படும் என்பதை விஞ்ஞானிகள் புதிய ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.
இதயம் துடிப்பதை நிறுத்திய பின்னரும், மூளையில் ஒருவித ‘மின் அலைகள்’ (Spikes of brain activity) ஏற்படுவதை ஆய்வாளர்கள் கவனித்துள்ளனர்.
இந்த நிலையில் மூளையில் ஏற்படும் மாற்றங்கள், ஒருவர் ஆழ்ந்த சிந்தனையிலோ அல்லது கனவு காணும் நிலையிலோ இருப்பதைப் போன்றே உள்ளன.
மரணத்தின் விளிம்பிற்குச் சென்று மீண்டவர்கள் கூறும் ‘வாழ்க்கை நினைவுகள் மின்னல் போல் வந்து சென்றது’ என்பதற்கு இதுவே காரணமாக இருக்கலாம்.
நரம்பியல் நிபுணர்கள் நடத்திய இந்த ஆய்வு, ‘மரணம்’ என்பது ஒரு நொடியில் நடக்கும் நிகழ்வு அல்ல, அது ஒரு படிப்படியான செயல்முறை என விளக்குகிறது.
மனித உணர்வுகள் மற்றும் உயிர் பிரிதல் குறித்த மர்மங்களை அவிழ்க்க இந்த நவீன கால மருத்துவ ஆய்வு ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

You must be logged in to post a comment.