World

ரகசியமாக அணு ஆயுத தளத்தை விரிவாக்கும் சீனா!

சீனா ரகசியமாக அணு ஆயுத தளங்களின் விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் அணு ஆயுத தளம் விரிவாக்கம்

சீனா சிச்சுவான் மாகாணத்தில் ரகசியமாக அணு ஆயுதத் தளங்களின் விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருவதை 2022 முதல் 2026 ம் ஆண்டு வரையிலான செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

ரென்னி பாபியர்ஸ் என்ற புவிசார் நிபுணர்கள் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையின் சிச்சுவானின் உள்ள ஜிடாங் என்ற தளத்தில் இந்த விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ரகசியமாக அணு ஆயுத தளத்தை விரிவாக்கும் சீனா! காட்டிக்கொடுத்த படங்கள் | China Sichuan Nuclear Expansion Indai Face Threat

செயற்கைக்கோள் புகைப்படங்களின் அடிப்படையில், இந்த அணு ஆயுத தளம் மறைவான பள்ளத்தாக்கு ஒன்றில் வலுவூட்டப்பட்ட பதுங்கு குழிகள், சிக்கலான குழாய் அமைப்புகள் மற்றும் மண் அரண்களுக்கு இடையே உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த பிரம்மாண்ட கட்டமைப்பு புளூட்டோனியம் பதப்படுத்துதலுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2030 ம் ஆண்டுக்குள் சீனா தன்னுடைய அணு ஆயுத எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்த இலக்கு வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு காத்திருக்கும் அச்சுறுத்தல்

ரகசியமாக அணு ஆயுத தளத்தை விரிவாக்கும் சீனா! காட்டிக்கொடுத்த படங்கள் | China Sichuan Nuclear Expansion Indai Face Threat

சீனாவின் இந்த அணு ஆயுதத் தளங்களின் விரிவாக்க பணிகள் இந்தியாவின் இமயமலை எல்லைக்கு மிக அருகில் அமைந்து இருப்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

புவியியல் காரணிகள் ஒரு புறம் இருக்க, சீனாவின் அணு ஆயுத பலம், லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட எல்லை மாநிலங்களின் பாதுகாப்பு கவலைகளையும் அதிகரித்துள்ளது.

சீனாவின் நவீன ஏவுகணைகளுக்கு எதிராக இந்தியா அக்னி V ஏவுகணை திட்டத்தை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading