Lead News

2030இல் கடனற்ற இலங்கையும் – 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானமும்.

கடன் இல்லாத வலுவான உள்நாட்டுப் பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்காகும் என்று தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் கவுன்சிலினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கடனற்ற இலங்கையே இலக்கு 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் ஏற்றுமதி வருவாயை 36 பில்லியன் டொலர்களாக உயர்த்துவதே எமது அரசாங்கத்தின் இலக்காகும்.

2030இல் கடனற்ற இலங்கையும் - 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானமும்.. அநுர அரசின் கனவு | Sri Lanka Government Income

2025ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 17.2 பில்லியன் டொலர்கள் ஏற்றுமதி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதனை படிப்படியாக அதிகரிப்பதே எமது பிரதான நோக்கமாகும்.

கடந்த இல்லாத, சுதந்திரத்தையும், அடையாளத்தையும் பாதுகாக்கும் வலுவான உள்நாட்டுப் பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் முக்கிய இலக்கு என குறிப்பிட்டுள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading