World

சவுதியில் முதல் ஷியா பிரிவைச் சேர்ந்தவர் அமைச்சராக பதவியேற்பு!!

சவுதி அரேபியாவில் அமைச்சரவை அமைச்சராக பதவியேற்ற முதல் “ஷியா” பிரிவைச் சேர்ந்தவர் பஹத் பின் அப்துல்ஜலீல் பின் அலி அல்-சைஃப் ஆவார் என சர்வதச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஷர்கியா மாகாணத்தில் 1976 இல் பிறந்து, கிங் ஃபஹத் பெட்ரோலியம் மற்றும் சுரங்க பல்கலைக்கழகத்தில் தகவல் மேலாண்மையில் பட்டம் பெற்ற அல்-சைஃப், கடன் , முதலீடு மற்றும் சர்வதேச நிதியுதவி ஆகிய துறைகளில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார், மேலும் 2021 முதல் சவுதி பொது முதலீட்டு நிதியத்தில் உலகளாவிய நிதி மற்றும் முதலீட்டு உத்தியின் முக்கிய பகுதிகளுக்குப் பொறுப்பேற்றுள்ளார்.

அல்-சைஃப், NEOM, ACWA பவர், கல்ஃப் இன்டர்நேஷனல் வங்கி, கிங் அப்துல்லா எகனாமிக் சிட்டி, கிங் சல்மான் விமான நிலைய மேம்பாட்டு நிறுவனம் மற்றும் எதிர்கால முதலீட்டு முயற்சி அறக்கட்டளை போன்ற பல முக்கிய நிறுவனங்களின் உறுப்பினராகவும் தலைவராகவும் இருந்துள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading