World

எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலையில் தீ:100 பேர் உயிரிழப்பு!

தெற்கு நைஜீரியாவில்,இமோ மாகாணத்தில் இயங்கி வந்த சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்ததில் 100 பேர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி நள்ளிரவு இடம்பெற்ற இத் தீவிபத்தில், உயிரிழந்தவர்களின் உடல்கள் வீதிகளிலும், மரக்கிளைகளிலும் சிதறிக் கிடப்பதாக அந்நாட்டுப் பொலிஸார்  தெரிவித்தனர்.

மேலும் திருட்டுக் கும்பல்கள் எண்ணெய்யை களவாட குழாய்களை உடைத்திருக்கலாம் என்றும் அதன் மூலம் இத் தீவிபத்து  இடம்பெற்று இருக்கலாம்  எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading