Local

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முன்னர் பிரதமர் மஹிந்த பதவி விலகுவார்!

பிரதமர் மகிந்த ராஜபக்ச சில தினங்களுக்குள் பதவி விலகுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்படும் முன்னர் அவர் பதவி விலகுவார் என தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது காணப்படும் சூழ்நிலையின் அடிப்படையில், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெறக் கூடி நிலைமை உருவாகியுள்ளது எனவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading