Local

எதிர்வரும் காலங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படும் சாத்தியம்!

எதிர்காலத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் மிகவும் பலவீனமாக உள்ளது. கோவிட் தொற்றுநோயை எதிர்கொண்டு அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்ச்சியாக வழங்கப்படுகின்றது.

எனினும், சம்பளத்தை தொடர்ந்து வழங்குவதற்கு வலுவான பொருளாதாரத்தை நாடு கொண்டிருக்கவில்லை என்பதை அமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார்.

அரச வருமானத்தில் 80 வீதம் அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவிடப்படுகின்றது. அதுபோல, எதிர்காலத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள குறைப்புக்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.

தனியார் ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.  

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading