Local

எதிர்வரும் நாட்களில் மிக அவதானமாக செயற்பட வேண்டும் என கோரிக்கை!

டெல்டா வைரஸ் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் மிக அவதானமாக செயற்பட வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி ,நாட்டில் பயணத்தடை நீக்கப்பட்டிருந்தாலும் பொது மக்கள் மிக அவதானத்துடன், செயற்பட வேண்டும் எனவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

டெல்டா திரிபு இந்தியாவில் அதிக மரணங்களை ஏற்படுத்தியுள்ளது. சமூகத்தில் டெல்டா திரிபு தொடர்பில் மக்கள் அவதானம் கொள்ள வேண்டும் என்பதுடன், சுகாதார வழிமுறைகளைச் சரியாக பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ,இதேவேளை வரும் 10 வாரங்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும், டெல்டா இலங்கை முழுதும் பரவும் வைரஸாக மாறிவிடும் என்றும் இராஜாங்க அமைச்சர் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading