Local

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு வரை தேர்தல்கள் இல்லை!

பொருளாதாரத்தை ஸ்திரபடுத்தும் வகையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுவரை எவ்வித தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனவே அடுத்த வருடம் முழுவதும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டங்களை செயற்படுத்த முன்னுரிமை வழங்குவது அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு விஜயம் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை நெருக்கடிக்கான தீர்வை முன்னிறுத்திய பன்னாட்டு ஒத்துழைப்பு மையத்தை நிறுவுதல், கொழும்பில் சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பாக அமெரிக்கர், இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடனும் கலந்துரையாடலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இடைக்கால அரசாங்கத்தை அமைத்திருந்தால் மட்டுமே 6 மாதங்களில் தேர்தல் ஒன்றினை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கும், இருப்பினும் பிரதமர் தலைமையில் தேசிய அரசாங்கமே தற்போது அமைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அடுத்த வருடம் மாசி மாதம் முதல் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைத்தாலும் அவர் நாடாளுமன்றத்தை கலைக்க மாட்டார் என்றே தெரிகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading