மாலை 6.30 மணிக்குப் பின்னர் மின்வெட்டு இல்லை!

நாட்டில் எதிர்வரும் முதலாம் திகதி வரை தொடர்ச்சியாக மாலை 6.30 க்குப் பின்னர் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் வழிகாட்டலுக்கு அமைய குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நாளைய தினம் நாட்டில் 2 மணித்தியாலமும் 10 நிமிடங்களும் மின் விநியோகத் தடையை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2.10 வரையான காலப்பகுதியில் A, B, C, D, P மற்றும் Q ஆகிய வலயங்களில் இவ்வாறு மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், பிற்பகல் 2.10 முதல் 4.20 வரையான காலப்பகுதியில் E, F, G, H, R, S மற்றும் T ஆகிய வலயங்களில் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது
