EntertainmentGossip

எனக்கு அது வேணும் அதனால்தான் 60 வயதில் இரண்டாவது திருமணம் செய்தேன்!

தமிழ் சினிமாவில் நடிகர்கள் ரஜினி, விஜய், விக்ரம் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்தவர் தான் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் ஒரு பெண்ணை 2ம் திருமணம் செய்து கொண்டார். இவருடைய 2ம் திருமணம் பேச்சுதான் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங்காகிக்கொண்டிருக்கிறது. ஏனென்றால், ஆஷிஷ் வித்யார்த்தி 60 வயதில் 2-வதாக திருமணம் செய்துதான்.

இந்நிலையில், நான் ஏன் 2ம் திருமணம் செய்து கொண்டேன் என்பது குறித்து ஆஷிஷ் இன்ஸ்டாவில் மனம் திறந்து பேசியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், நான் 23 ஆண்டுகளுக்கு முன் பாடகி ராஜோஷி பருவா என்பவரை முதலாவதாக திருமணம் செய்து கொண்டேன். ஆனால் எனக்கும், என் மனைவிக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தது.

இதனால், நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். எனக்கு 55 வயது இருக்கும்போது துணை வேண்டும் என்று நினைத்தேன். இதனால் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தேன்.

அப்போதுதான் எனக்கு ரூபாலியை சந்தித்தேன். முதலில் நாங்கள் நட்புடன் தான் பழகினோம். இது நாளடைவில் காதலாக மாறியது. நாங்கள் ஒருவரையொருவர் காதலிக்க ஆரம்பித்தோம். என்னுடைய 2-வது திருமணம் குறித்து சமூகவலைத்தளங்களில் பலர் விவாதம் செய்தனர்.

எனக்கு இப்போ 57 வயதுதான் ஆகிறது. 60 வயது கிடையாது. வயது ஒரு தடையில்லை. நாங்கள் இருவரும் சந்தோஷமாக திருமண பந்தத்தில் பயணம் செய்ய உள்ளோம் என்று பேசியுள்ளார். .

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading