என்னிடம் பௌத்த நூல்கள் இல்லாததால் நான் பயங்கரவாதி என்றனர்!

என்னிடம் பௌத்த நூல்கள் இல்லாததால் நான் பயங்கரவாதி என விசாரணையாளர்கள் தெரிவித்தனர் என 2020 இல் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த வருடம் டிசம்பரில் விடுதலை செய்யப்பட்ட இளம் கவிஞர் அஹ்னாவ் ஜாசீம் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
பேட்டி யொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
என்னை வவுனியாவிற்கு அழைத்துச்சென்றவேளை அங்கிருந்த பெயர் பலகையை பார்த்து நான் அது பயங்கரவாத விசாரணை பிரிவு என்பதை அறிந்துகொண்டேன்.
அவ்வேளையே நான் அச்சமடைந்தேன்.
நான் எந்த தவறும் செய்யவில்லை-அவர்கள் எனது பாடசாலை செயற்பாடுகள் குறித்தும் நான் மாணவர்களிற்கு என்ன கற்றுக்கொடுத்தேன் என்பது குறித்தும் கேள்வி எழுப்பினார்கள்.
நான் ஐஎஸ் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் குறித்த வீடியோக்களை சிறுவர்களிற்கு காண்பித்தேன் என அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
நான் ஜஹ்ரானிற்கு ஆதரவாகவிரிவுரைகளில் ஈடுபட்டதாக தெரிவித்த அவர்கள் நவரசம் நூல் சஹ்ரானுடன் தொடர்புபட்டது-அவரது கொள்கைகளிற்கு ஆதரவானது எனவும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.
அன்றுஅதிகாலை வரை அவர்கள் என்னிடம் இந்த கேள்விகளை கேட்டார்கள்-நான் எனக்கு பயங்கரவாதம் தீவிரவாதத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்றேன், பயங்கரவாதிகளிற்கு எதிராக நான் எழுதியதை வாசிக்குமாறு அவர்களை நான் கேட்டுக்கொண்டேன்.
அதன் பின்னரும்அவர்கள் என்னிடம் நிறைய கேள்விகளை கேட்டார்கள்-.
என்னிடம் கிறிஸ்தவ நூல்கள் உள்ளன -இந்து நூல்கள் இஸ்லாமிய நூல்கள் உள்ளன ஆனால் பௌத்த நூல்கள் இல்லை என அவர்கள் தெரிவித்தனர் அதற்கான காரணம் என்னவென விசாரித்தனர்- நான் சில பௌத்த நூல்களை வாசித்திருக்கின்றேன் ஆனால் என்னிடம் பௌத்த நூல்கள் இல்லை என நான் தெரிவித்தேன்.
என்னிடம் பௌத்த நூல்கள் இல்லாததால் நான் பயங்கரவாதி என அவர்கள் தெரிவித்தனர்
