Local

எரிபொருள் நிலைய உரிமையாளரின் வீடு தீக்கிரை!

அநுராதபுரம் – இபலோகம பகுதியில் எரிபொருள் நிலைய உரிமையாளர் ஒருவரின் வீடு தீக்கிரையாக்க்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத சிலரினால் இவ்வாறு தீமூட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், பொலிஸார் மற்றும் பிரதேச பொதுமக்கள் ஒன்றினைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

மேலும், வீட்டில் இருந்த பெண்னொருவரும், இரண்டு பிள்ளைகளும் மீட்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், வீட்டின் பெருமளவான உடமைகள் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட பிள்ளைகளுக்குள் இம்முறை சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள பிள்ளையொன்றும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading