World

எருமை மாட்டில் ஏறிவந்து வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்!

பீகார் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. செப் 24ம் தேதி துவங்கும் இந்த தேர்தல் டிசம்பர் 12ம் தேதி வரை 11 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

இந்த தேர்தலில் ராம்பூர் கட்டிகர் பகுதியில் வேட்பாளராக போட்டியிடுபவர் ஆசாத் அமல், இவர் சமீபத்தில் தன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதற்காக அவர் எருமை மாட்டின் மீது ஏறி ஊர்வலமாக வந்து தன் வேட்பு மனுவை அளித்தார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து கருத்திட்டு வருகின்றனர்.

தான் ஒரு கால்நடை வளர்ப்பவர் என்றும் தன்னால் பெட்ரோல் அல்லது டீசலை வாங்கும் அளவிற்கு வசதியில்லாததால் எருமை மாட்டின் மீது ஏறி ஊர்வலமாக வந்ததாக கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading