World

எலிசபெத் மகாராணி கணவருடன் அடக்கம் செய்யப்பட்டார்!

ராணி தனது மறைந்த கணவரான எடின்பர்க் பிரபுவுடன் வின்ட்சர் கோட்டையில் உள்ள கிங் ஜார்ஜ் VI மெமோரியல் சேப்பலில் அடக்கம் செய்யப்பட்டார் என்று அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று கிங் ஜார்ஜ் VI மெமோரியல் சேப்பலில் ஒரு தனிப்பட்ட அடக்கம் நடந்ததாகவும் இது வின்ட்சர் டீனால் நடத்தப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மன்னர் சார்லஸ் III மற்றும் அரச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் ஊடகங்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இது தனிப்பிட்ட குடும்ப நிகழ்வு என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading