Local

அதிக உணவுப் பணவீக்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 4ஆம் இடம்!

உலகில் அதிக உணவுப் பணவீக்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்திலுள்ளதென உலக வங்கி தெரிவித்துள்ளது.

2021ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை, 53 நாடுகளின் உணவுப் பாதுகாப்பு குறித்த புதிய அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, அதிக உணவுப் பணவீக்கம் கொண்ட முதல் 10 நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் உணவுப் பணவீக்கம் 91 சதவீதமாக உள்ளது. உலகிலேயே அதிக உணவுப் பணவீக்கம் கொண்ட நாடாக சிம்பாப்வேவும், லெபனான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் முறையே குறித்த பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

உலக வங்கியின் தரவுகளின் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் இலங்கையின் உணவுப் பணவீக்கம் 9.9 சதவீதமாக காணப்பட்டது.

எனினும் அந்த எண்ணிக்கை ஒரு வருடத்துக்குள் வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading