Local

எலியால் 4 நாட்கள் பறக்க முடியாமல் தடுமாறிய ஸ்ரீலங்கன்!

 

பாகிஸ்தானின் லாஹூர் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் எலி ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது.

இதனால் விமானம் பறக்க முடியாமல் நான்கு நாட்களாக தரையிறக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் பொறியியல் பிரிவின் தலைவர் அர்ஜுன கபுகிகியான நேற்று (26) தெரிவித்திருந்தார்.

லாஹூர் விமான நிலையத்தில் விமானம் நிறுத்தப்பட்டிருந்த போது பயணிகளின் பையில் இருந்து அந்த எலி விமானத்திற்குள் நுழைந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

எலியை அகற்றுவது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை பெற வேண்டியுள்ளதாகவும், விமானத்திற்குள் இருந்த பொருளை பயன்படுத்தி எலியை அகற்ற சுமார் 3 நாட்கள் ஆனதாகவும் அவர் கூறினார்.

எலியினால் விமானம் சேதமடைந்ததா என்பதை கண்டறிய தொழில்நுட்ப வல்லுநர்கள் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading