Local

எலி எச்சத்திற்கு 60 ஆயிரம் ரூபா தண்டம்!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் எலி எச்சங்களுடன் கூடிய உணவு பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் பொது சுகாதார பரிசோதகர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன் போது, வண்டு மொய்ந்த உணவுப்பொருட்களையும் காலாவதி கடந்த உணவுப்பொருட்களையும் எலி எச்சங்களுடன் கூடிய உணவுப்பொருட்களையும் பூஞ்சணம் மொய்த்த உணவுப்பொருட்களையும் விற்பனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டில் பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது, தன் மீதான குற்றச்சாட்டை உரிமையாளர் ஏற்றுக்கொண்டதை அடுத்து , உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , உரிமையாளருக்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading