AB Mauri Lanka நிறுவனம் “பேக்ஸ்டார்” (BakeStar) தயாரிப்பை அறிமுகப்படுத்துகின்றது:
நாட்டின் பேக்கரி மூலப்பொருள் துறையில் நம்பகமான பெயரான ஏபி மௌரி லங்கா (AB Mauri Lanka) நிறுவனம், இன்றைய சவாலான பொருளாதாரச் சூழ்நிலையில் ,இலங்கை பேக்கரி உரிமையாளர்களுக்கு ஆதரவளிப்பதற்காக உருவாக்கப்பட்ட பேக்கரி தீர்வுகளின் விரிவான வரம்பான “பேக்ஸ்டார்” (BakeStar) தயாரிப்பை பெருமையுடன் அறிமுகப்படுத்துகின்றது.
உள்நாட்டு பேக்கரிகள் எதிர்கொள்ளும் யதார்த்தங்கள் குறித்த ஆழமான புரிதலுடன் வடிவமைக்கப்பட்ட பேக்ஸ்டார், நுகர்வோருக்கு உகந்த விலையில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் அதே வேளையில், நிலையான மற்றும் உயர்தர முடிவுகளை வழங்குகின்றது. ஒரு பேக்கரி சார்ந்த முன்முயற்சியாக, இந்த பிராண்ட் பேக்கரி உரிமையாளர்களின் கருத்துக்களைக் கேட்பதற்கும், தரத்தில் எந்தவொரு சமரசமும் செய்யாமல், அவர்களின் செயற்பாட்டு மற்றும் நிதித் தேவைகள் ஆகிய இரண்டையும் பூர்த்தி செய்யும் தீர்வுகளுடன் பதிலளிப்பதற்கும் ஏபி மௌரி லங்காவின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றது.
ஒவ்வொரு பேக்கரி உரிமையாளருக்குமான ஒரு முழுமையான தயாரிப்பு வரம்பு
பேக்ஸ்டார் என்பது ஒற்றை தயாரிப்பு தீர்வுகளுக்கு அப்பால் சென்று, வீட்டு பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் வணிக ரீதியான செயற்பாடுகள் ஆகிய இருதரப்பிற்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட வளர்ந்து வரும் தயாரிப்பு வரிசையை வழங்குகின்றது. இந்த தயாரிப்பு வரம்பில் பேக்கிங் பவுடர் (baking powder) கொக்கோ பவுடர் (cocoa powder) ஸ்பாஞ்சி மிக்ஸ் (spanchi mix)>, கேக் மிக்ஸ் (cake mix)> கேக் ஜெல் (cake gel) மற்றும் பல அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கியுள்ளதுடன், இது ஆரம்பம் முதல் இறுதி வரை பேக்கரி உரிமையாளர்கள் நம்பகமான, உயர்தர தயாரிப்புகளை உருவாக்குவதற்கு தேவையான அனைத்தையும் வழங்குகின்றது.
இந்த தயாரிப்பு வரம்பின் மையப்பகுதியாக “பேக்ஸ்டார் கேக் ஜெல்” (BakeStar Cake Gel) மற்றும் “பேக்ஸ்டார் கேக் மிக்ஸ்” (BakeStar Cake Mix) போன்ற தயாரிப்புகள் உள்ளன, இவை சீரான அளவு (volume)>அமைப்பு (texture) மற்றும் இறுதி வடிவமைப்பை (finish) உறுதி செய்யும் அதே வேளையில் பேக்கிங் செயன்முறைகளை எளிதாக்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. இத்தீர்வுகள் அதிக நிபுணத்துவம் வாய்ந்த உழைப்பின் மீதான தேவையைக் குறைப்பதுடன், இதன் மூலம் பேக்கரிகள் ஒவ்வொரு தொகுதி (batch) தயாரிப்பிலும் தங்களின் தரநிலைகளைப் பேண முடிகின்றது.
சீரான தன்மை, செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை
முடிவுகள் பெரும்பாலும் தனிநபரின் திறனைச் சார்ந்திருக்கும் ஒரு தொழில்துறையில், அந்த முடிவுகளை தரப்படுத்துவதற்காக பேக்ஸ்டார் வடிவமைக்கப்பட்டுள்ளது. யூகங்களின் தேவையைக் குறைப்பதன் மூலமும், தயாரிப்பு முறைகளை நெறிப்படுத்துவதன் மூலமும், இந்த தயாரிப்பு வரம்பு பேக்கரி உரிமையாளர்கள் சீரான தரத்தை அடைவதற்கு உதவுவதுடன், கழிவுகளைக் குறைத்து ஒட்டுமொத்த செயல்திறனையும் மேம்படுத்துகின்றது.
மிக முக்கியமாக, பேக்ஸ்டார் ,ன்றைய சந்தையில் ஒரு முக்கியமான தேவையை நிவர்த்தி செய்கின்றது: அதாவது தரத்துடன் செலவை சமநிலைப்படுத்துதல். கவனமாக வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகள் மூலம், பேக்கரி உரிமையாளர்கள் இனி இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை.
இன்றைய பேக்கிங் சூழலுக்காக உருவாக்கப்பட்டது
“பேக்ஸ்டார் தயாரிப்புக்கு பின்னாலுள்ள நோக்கம் மிகவும் எளிமையானது, பேக்கரி உரிமையாளர்களுக்கு உண்மையிலேயே பயன்படக்கூடிய தீர்வுகளுடன் அவர்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் விரும்பினோம்,” என்று ஏபி மௌரி லங்கா நிறுவனத்தின் தொழில்நுட்ப முகாமையாளர் சுரேன் பெரேரா கூறுகின்றார். “தொழில்துறை எதிர்கொள்ளும் அழுத்தங்களை நாங்கள் புரிந்துகொள்கின்றோம், மேலும் இந்த தயாரிப்பு வரம்பு நம்பகத்தன்மை மற்றும் மதிப்பு ஆகிய இரண்டையும் வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பேக்ஸ்டார் மூலம், தற்போதைய சந்தை நிலைமைகளுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அதே வேளையில், ஒவ்வொரு தயாரிப்பும் தரத்தில் சமரசம் செய்யாமல் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை பேக்கரி உரிமையாளர்கள் நம்பலாம்.”
கிடைக்கும்தன்மை
பேக்ஸ்டார் தயாரிப்புகள் இப்போது சிறிய அளவிலான தொழில்முனைவோர் மற்றும் பெரிய அளவிலான பேக்கரி நிறுவனங்கள் ஆகிய இருதரப்பினருக்கும் ஏற்றவாறு வசதியான பெக்கேஜிங்கில் நாடு முழுவதும் கிடைக்கின்றன. ஏபி மௌரி லங்காவின் தொழில்நுட்ப நிபுணத்துவத்தின் ஆதரவுடன், பேக்ஸ்டார் இலங்கை முழுவதிலும் உள்ள பேக்கரி உரிமையாளர்களுக்கு ஒரு நம்பகமான பங்காளியாக மாறத் தயாராக உள்ளது.
தொடர்பு கொள்ளும் தகவல்
[அஞ்சலி கமகே – Anjali.Inoshika@abmauri.com -+94765787878]
ஏபி மௌரி லங்கா பற்றி: ஏபி மௌரி லங்கா என்பது உணவு மற்றும் பேக்கிங் துறையில் ஒரு முன்னணி நிறுவனமாகும், இது நிலைத்தன்மை மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்பிற்கான அர்ப்பணிப்புக்கு பெயர் பெற்றது. நிறுவனத்தின் ESG உத்தியானது, குறிப்பாக கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் சமூகங்களில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றது. அதன் புதுமையான முன்முயற்சிகள் மூலம், ஏபி மௌரி லங்கா இலங்கை முழுவதும் உள்ள தனிநபர்கள் மற்றும் சமூகங்களின் வாழ்க்கையில் தொடர்ந்து நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.
ஏபி மௌரி லங்கா நிறுவனம் “பேக்ஸ்டார்” தயாரிப்பை அறிமுகப்படுத்துகின்றது: இலங்கை பேக்கரி உரிமையாளர்களுக்கு தரம் மற்றும் மதிப்புடன் ஆதரவளித்தல்
இலங்கையின் பேக்கரி மூலப்பொருள் துறையில் நன்கு நிலைநாட்டப்பட்ட பெயரான ஏபி மௌரி லங்கா (AB Mauri Lanka) நிறுவனம், இ,ன்றைய சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பேக்கரி உரிமையாளர்களுக்கு ஆதரவளிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புதிய தயாரிப்பு வரம்பான “பேக்ஸ்டார்” (BakeStar) தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
பேக்ஸ்டார் ஒரு தெளிவான நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது, அதாவது தரத்தில் சமரசம் செய்யாமல் பேக்கிங் செயன்முறையை மிகவும் நம்பகமானதாகவும், மிகவும் சீரானதாகவும், மேலும் மலிவானதாகவும் மாற்றுவதே ஆகும். ஒரு பேக்கரி சார்ந்த முன்முயற்சியாக, இந்த தயாரிப்பு வரம்பு அதிகரித்து வரும் செலவுகள் முதல் ஒவ்வொரு முறையும் நம்பகமான முடிவுகளுக்கான தேவை வரை பேக்கரி உரிமையாளர்கள் தற்போது எதிர்கொள்ளும் உண்மையான சவால்கள் குறித்த புரிதலைப் பிரதிபலிக்கின்றது.
பேக்ஸ்டார் தயாரிப்பு வரம்பானது அன்றாட பேக்கிங் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளின் பரந்த தேர்வினை வழங்குகின்றது. ,இதில் பேக்கிங் பவுடர் (baking powder), கொக்கோ பவுடர் (cocoa powder), ஸ்பாஞ்சி மிக்ஸ் (spanchi mix), கேக் மிக்ஸ் (cake mix), கேக் ஜெல் (cake gel) மற்றும் பல உள்ளடங்குகின்றன, இது வீட்டு பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் வணிக ரீதியான சமையலறைகள் ஆகிய ,ருதரப்பினருக்கும் தாங்கள் நம்பக்கூடிய ஒரு பிராண்டின் கீழ் அத்தியாவசிய மூலப்பொருட்களைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது.
“பேக்ஸ்டார் கேக் ஜெல்” மற்றும் “கேக் மிக்ஸ்” போன்ற தயாரிப்புகள் சீரான முடிவுகளைப் பேணுகின்ற அதே வேளையில், பேக்கிங் செயன்முறையை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை சமையலறையில் அதிக நிபுணத்துவம் வாய்ந்த திறன்களுக்கான தேவையைக் குறைக்கும் அதே வேளையில், தயாரிப்புகளின் அளவு (volume), அமைப்பு (texture) மற்றும் ஒட்டுமொத்த இறுதி வடிவமைப்பை (finish) மேம்படுத்த உதவுகின்றன. இது தயாரிப்பில் ஈடுபடுபவர் யார் என்பதைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு தொகுதியிலும் (டியவஉh) பேக்கரிகள் தமது தரத்தைப் பேண அனுமதிக்கின்றது.
பல வணிக நிறுவனங்கள் செலவு மற்றும் தரம் ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒரு காலகட்டத்தில், பேக்ஸ்டார் அந்த இடைவெளியைக் குறைக்க முயற்சிக்கின்றது. இந்த தயாரிப்பு வரம்பு பேக்கரி உரிமையாளர்கள் எதிர்பார்க்கும் செயல்திறனை வழங்கும் அதே வேளையில், தற்போதைய சந்தை நிலைமைகளுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
“நாங்கள் பேக்கரி உரிமையாளர்களை மனதில் கொண்டே பேக்ஸ்டாரை உருவாக்கினோம்,” என்று ஏபி மௌரி லங்கா நிறுவனத்தின் தொழில்நுட்ப முகாமையாளர் சுரேன் பெரேரா கூறுகிறார். “அவர்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்களை நாங்கள் புரிந்துகொள்கின்றோம், மேலும் இந்த தயாரிப்பு வரம்பு தரத்தில் எந்தவொரு சமரசமும் செய்யாமல் நம்பகமான, நடைமுறைக்குரிய மற்றும் நியாயமான விலையிலான தயாரிப்புகளுடன் அவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.”
பேக்ஸ்டார் தயாரிப்புகள் இப்போது இலங்கை முழுவதும் கிடைக்கின்றன, இது சிறிய அளவிலான பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் பெரிய அளவிலான செயற்பாடுகள் ஆகிய இருதரப்பிற்கும் ஏற்றதாக அமைகின்றது. ஏபி மௌரி லங்காவின் தொழில்நுட்ப நிபுணத்துவத்தின் ஆதரவுடன், இந்த தயாரிப்பு வரம்பானது தங்களின் அன்றாட பணிகளில் சீரான தன்மை, மதிப்பு மற்றும் தரம் ஆகியவற்றைத் தேடும் பேக்கரி உரிமையாளர்களுக்கு ஒரு நம்பகமான தேர்வாக அமையும் வகையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
தொடர்பு கொள்ளும் தகவல்
[அஞ்சலி கமகே – Anjali.Inoshika@abmauri.com- +94765787878]
ஏபி மௌரி லங்கா பற்றி: ஏபி மௌரி லங்கா என்பது உணவு மற்றும் பேக்கிங் துறையில் ஒரு முன்னணி நிறுவனமாகும், இது நிலைத்தன்மை மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்பிற்கான அர்ப்பணிப்புக்கு பெயர் பெற்றது. நிறுவனத்தின் ESG உத்தியானது, குறிப்பாக கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் சமூகங்களில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றது. அதன் புதுமையான முன்முயற்சிகள் மூலம், ஏபி மௌரி லங்கா இலங்கை முழுவதும் உள்ள தனிநபர்கள் மற்றும் சமூகங்களின் வாழ்க்கையில் தொடர்ந்து நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

You must be logged in to post a comment.