Local

மருந்து வில்லை தொண்டையில் சிக்கி ஐந்து வயது சிறுவன் பரிதாப மரணம்!

மருந்து வில்லை தொண்டையில் சிக்கி,ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த பரிதாப சம்பவம், கலேவெல நகரில் இடம்பெற்றுள்ளது.

நேற்றிரவு, சிறுவனின் தொண்டையில் மருந்து வில்லை சிக்கியதையடுத்து, உடனடியாக கலேவெல பிரதேச வைத்தியசாலைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.

கலெவெல- ஜயதிலக்க மாவத்தையைச் சேர்ந்த, மிதும் சனுஜ கங்கொடவத்த என்ற சிறுவனே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கலேவெல ஆரம்பப் பாடசாலையில் கல்விப் பயிலும் குறித்த சிறுவனுக்கு, சுகாதார பிரிவினரால் நேற்று பூச்சி மருந்து வழங்கப்பட்டுள்ளது.

சிறுவனின் தாய், குறித்த மருந்து வில்லையை, நேற்றிரவு, இரு துண்டுகளாக்கி சிறுவனுக்கு பருக கொடுத்தபோதே, இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பில், கலேவெல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading