Local

ஐந்து வருடங்களில் ஐந்தாம் புலமை பரிசில் பரீட்சை முற்றாக இல்லாதொழிக்கப்படும்

இன்னும் ஐந்து வருடங்களில் ஐந்தாம் வகுப்பு புலமை பரிசில் பரீட்சை முற்றாக ஒழிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்மகுமார தெரிவித்துள்ளார்.

உலகத்தில் உள்ள மிக மோசமான பரீட்சை ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை என கூறிய அவர், அதனை தடை செய்யததால் வசதி வாய்ப்புகள் உள்ள பாடசாலைகளுக்கு பின் தங்கிய பாடசாலை மாணவர்கள் செல்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போகிறது.

எதிர்காலத்தில் பின் தங்கிய பாடசாலைகளை இல்லாமல் செய்யப்பட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்படும். எதிர்வரும் ஐந்து வருடங்களில் ஐந்தாம் வகுப்பு புலமை பரிசில் பரீட்சை முற்றாக இல்லாதொழிக்கப்படும் என்றும் ஷாந்த பத்மகுமார குறிப்பிட்டுள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading