World

ஐரோப்பாவிற்குச் செல்ல முயன்ற இருவர் விமான நிலையத்தில் சடலங்களாக மீட்பு!

அல்ஜீரியாவில் Air Algerie விமானம் ஒன்றின் பயணப்பெட்டிகள் வைக்கும் இடத்தில் இரு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத.

அந்த விமானம் அல்ஜியர்ஸ் (Algiers) விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

நேற்று காலை 5 மணி அளவில் இரு ஆண்களின் சடலங்கள் அதில் கண்டுபிடிக்கப்பட்டன. உயிரிழந்தவர்கள் 20க்கும் 23 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த விமானம் எங்கிருந்து வந்தது, எங்கு செல்கிறது என்ற தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது. அந்த இருவரும் ரகசியமாக ஐரோப்பாவிற்குச் செல்ல முயன்றதாக அல்ஜீரிய ஊடகம் தெரிவித்தது.

கடந்த மார்ச் மாதம் 16 வயது இளையர் ஒருவர் Air Algerie விமானத்தின் பயணப்பெட்டி வைக்கும் இடத்தில் ஒளிந்திருந்து பாதுகாப்பாய் பிரான்ஸ் சென்றடைந்ததாகக் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading