Local

பணம் அச்சிடுவது தொடர்பில் ரணிலின் யோசனைக்கு மத்திய வங்கி எதிர்ப்பு!

ஊழியர்களுக்கான கொடுப்பனவை இடையூறின்றி மேற்கொள்வதற்கு பில்லியன் கணக்கான ரூபாய்களை அச்சிடவேண்டும் என்று பிரதமர் வெளியிடப்பட்ட கருத்து பல்வேறு விமர்சனங்களை  ஏற்படுத்தியுள்ளது என மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ.விஜேவர்தன  தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலை தொடர்பாக ஆராயும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கியின் சுயாதீனத் தன்மைக்கு மதிப்பளிக்க வேண்டும்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் மத்திய வங்கியின் சுயாதீனத் தன்மைக்கு மதிப்பளிக்க வேண்டும்.

மத்திய வங்கி மீதான எந்தவொரு தலையீடுகளும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை வலுவிழக்கச் செய்துவிடும் என்றும்  விஜேவர்தன எச்சரித்துள்ளார்.

ஊழியர்களுக்கான கொடுப்பனவை இடையூறின்றி மேற்கொள்வதற்கு பில்லியன் கணக்கான ரூபாய்களை அச்சிடவேண்டும் என்று பிரதமர் வெளியிட்ட கருத்து பல்வேறு விமர்சனங்களை  ஏற்படுத்தியுள்ளதுடன், இந்த நடவடிக்கையானது நீரிழிவு நோயாளிக்கு சீனி அதிகளவில் உள்ள உணவை வழங்குவதைப் போன்ற ஒரு செயற்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு மத்திய வங்கியின் மீதான அநாவசிய தலையீடுகள், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த தற்போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading