Sports

ஒரே இன்னிங்ஸில் 8 பேரை ஆட்டமிழக்க செய்து லிட்டன் தாஸ் சாதனை

litton das set new world record 8 dismissals in test innings: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில், வங்கதேச விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ், ஒரே இன்னிங்ஸில் 8 பேரை ஆட்டமிழக்க செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்திற்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது.

Towhid Hridoy மற்றும் லிட்டன் தாஸின் அதிரடி சதத்தால் வங்கதேச அணி, முதல் இன்னிங்ஸில் 400 ஓட்டங்கள் குவித்தது.

ஒரே இன்னிங்ஸில் 8 பேரை ஆட்டமிழக்க செய்து லிட்டன் தாஸ் உலக சாதனை | Litton Das Set New Record 8 Dismissals In Innings

அதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்கா அணி, மார்கஸ் ஆக்கர்மேன் மற்றும் ரியான் ரிகெல்டனின் அதிரடி சதத்தில் 557 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

இந்த இன்னிங்ஸில் வங்கதேச அணியின் விக்கெட் கீப்பராக இருந்த லிட்டன் தாஸ், 8 வீரர்களை ஆட்டமிழக்க செய்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக வீரர்களை ஆட்டமிழக்க செய்த சாதனையை படைத்துள்ளார்.

ஒரே இன்னிங்ஸில் 8 பேரை ஆட்டமிழக்க செய்து லிட்டன் தாஸ் உலக சாதனை | Litton Das Set New Record 8 Dismissals In Innings

இதில், 6 விக்கெட்களை கேட்ச் பிடித்தும், 2 விக்கெட்களை ஸ்டம்பிங் மூலமும் வீழ்த்தியுள்ளார்.

முன்னதாக வசிம் பாரி (பாகிஸ்தான்), பாப் டெய்லர் (இங்கிலாந்து), இயன் ஸ்மித் (நியூசிலாந்து), ரிட்லி ஜேக்கப்ஸ் (மேற்கிந்தியத் தீவுகள்) மற்றும் ஜோஷுவா டா சில்வா (மேற்கிந்தியத் தீவுகள்) ஆகியோர் 7 பேரை ஆட்டமிழக்க செய்ததே அதிகபட்சமாக இருந்தது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading