Local

ஒரே நாளில் 915 பேர் பலி 20 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிப்பு!

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
மேலும், இதுவரை 10.51 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ் தொற்றுக்கு இதுவரை 22.84 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரசால் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது இங்கிலாந்து 5-வது இடத்தில் உள்ளது.
இதனிடையே, இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 20,634 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் இங்கிலாந்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 38,92,459 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 915 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரத்து 250 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 18,28,510 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 19,53,699 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading