Features

ஒரே நேரத்தில் 40 வகையான பழங்களைக் காய்க்கும் அதிசய மரம்!

அமெரிக்காவின் சைரகஸ் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பேராசிரியராக பணியாற்றிய சாம் வான் அகேன், தனது பண்ணைத் தோட்டத்தில் விதவிதமான மரங்கள் மற்றும் தாவரங்களை வளர்த்து வருகிறார்.

நியூயார்க் மாகாணத்தில் அவர் வைத்திருக்கும் விவசாயப் பண்ணையில் கிராப்டிங் முறையில் உருவாக்கிய ஒரு மரம், ஒரே நேரத்தில் 40 வகையான பழங்களைக் காய்க்கிறது. அந்த மரத்துக்கு ட்ரீ 40 என்றும் பேராசிரியர் சாம் பெயரிட்டுள்ளார்.

இதற்காக சுமார் 7 ஆண்டுகளாக தீவிர முயற்சியில் ஈடுபட்ட அவர், அதில் வெவ்வேறு விதமான மரங்கள் மற்றும் தண்டுகளை இணைத்து வளர்த்து வந்துள்ளார்.

அவரின் தொடர் முயற்சியினால் அந்த மரத்தில் தற்போது செரிஸ், பீச்சஸ், பிளம்ஸ், என 40 வகையான பழங்கள் காய்த்துள்ளன. நம்மூரில் மாம்பழங்களை சுவை மிக்கதாக மாற்றுவதற்கு ‘ஒட்டு மாங்கனி’ என்ற முறை பயன்படுத்தப்படுவதுண்டு

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading