Local

தலைக்கு மேல் அடி! ஓட்டோ கட்டணமும் அதிகரிப்பு!!

இன்று முதல் முச்சக்கரவண்டிகளின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு சில முச்சக்கரவண்டி சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

எரிபொருள் விலையேற்றத்தை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு மாத காலத்தில் 5 தடவைகள் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளது.

இன்றிலிருந்து தமது சங்கத்தில் 2 ஆம் கிலோமீற்றருக்கான கட்டணம் 5 ரூபாவால் அதிகரிக்கும் என தேசிய ஒன்றிணைந்த முச்சக்கரவண்டிகள் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் எல். ரோகன பெரேரா தெரிவித்தார்.

இதேவேளை, இன்று முதல் மேல் மற்றும் தென் மாகாணத்தில் மட்டும் 2 ஆவது கிலோமீற்றருக்கான கட்டணம் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என இலங்கை சுய தொழில் தேசிய முச்சகரவண்டிகள் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, விலைச்சூத்திரத்திற்கு ஏற்ப முச்சகரவண்டி கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக அகில இலங்கை முச்சகரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போதைக்கு விலை அதிகரிப்பது இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

வீதிப் பாதுகாப்பு தொடர்பிலான தேசிய சபையின் தகவல்களின் படி நாட்டில் 11,56,000 முச்சகரவண்டிகள் காணப்படுகின்றன.

அவற்றில் 8,50,000 முச்சக்கரவண்டிகள் பாவனையில் உள்ளதுடன் 5,50,000 முச்சக்கரவண்டிகள் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading