Cinema

கங்கனா ரணாவத்வை கன்னத்தில் அறைந்த பெண் காவலர்

சண்டிகர் விமான நிலையத்தில் பிரபல நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத்வை கன்னத்தில் அறைந்த சிஐஎஸ்எஃப் பெண் காவலருக்கு வேலை தருவதாக பிரபல பாடகர் விஷால் தத்லானி உறுதியளித்துள்ளார்.

சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் குல்விந்தர் கவுர் என்ற சிஐஎஸ்எஃப் பெண் காவலர் அறைந்தார். இது குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.

விவசாயிகளுக்கு எதிராக கங்கனா ரணாவத் தெரிவித்த கருத்துகளே இந்த தாக்குதலுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தை அடுத்து குல்விந்தர் கவுர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவருக்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் பஞ்சாப் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையிலேயே, கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு இசையமைப்பாளரும் பாடகருமான விஷால் தத்லானி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூக ஊடகங்களில் வெளியியிட்டுள்ள பதிவில்,

“நான் வன்முறையை ஆதரிப்பது இல்லை. ஆனால் நிச்சயமாக அந்த காவலரின் தனிப்பட்ட கோபத்தின் தேவையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

அவர் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவருக்காக வேலை காத்துக் கொண்டிருக்கிறது என்பதை நான் உறுதியளிக்கிறேன். ஜெய்ஹிந்த். ஜெய்ஜவான். ஜெய் கிசான்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading