World

கங்கை ஆற்றில் மிதந்து வந்த பெட்டிக்குள் குழந்தை!

உத்தரப்பிரதேசத்தில் மரப்பெட்டியில் வைத்து ஆற்றில் விடப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

இதன்படி ,குல்லு தாத்ரி வனப்பகுதியில் கங்கை ஆற்று கரையில் குழந்தையின் அழுகுரல் கேட்டதை அறிந்த தொழிலாளி ஒருவர் பார்த்தபோது, மரப்பெட்டி ஒன்று மிதந்து வந்ததைக் கண்டார்.

மேலும் ,அதனைத் திறந்து பார்த்தபோது உள்ளே பிறந்து சில தினங்களேயான பச்சிளம் பெண் சிசு இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார்.

அதற்கமைய ,பெட்டியின் உள்ளே துர்க்கையின் படம், ஜாதகம் போன்றவைகளுடன் கங்கையின் மகள் என்று எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து காவல்துறையினர் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading