World

கஞ்சாவுக்கு சட்ட அனுமதி வழங்கிய முதல் ஆசிய நாடு!

தாய்லாந்தில் கஞ்சாவைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு சட்ட பூர்வ அனுமதியை வழங்கியுள்ளது.

பல நாடுகளில் கஞ்சா பயன்படுத்தத் தடை செய்யப்பட்டு வரும் வேளையில் தாய்லாந்து அதனைச் சட்டப் பூர்வமாக்கியுள்ளது.

மரிஜுவானா எனப்படும் கஞ்சா செடிகளை வளர்க்கவும், உட்கொள்ளவும் அனுமதி வழங்கியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் தேநீர் கடைகள் மற்றும் உணவகங்களில் கஞ்சாவை விற்க, பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த தயாரிப்புகளில் டெட்ராஹைட்ரோகன்னாபினோல் 0.2 சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம் மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்காக தான் கஞ்சாவை பயன்பாட்டிற்குக் கொண்டு வர அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 ஆண்டுக்கு முன் தொலைந்த ஆமை உயிருடன் கண்டுபிடிப்பு! உரிமையாளர் நெகிழ்ச்சி

அதே நேரத்தில் பொதுவெளியில் கொண்டாட்டத்திற்காகக் கஞ்சாவைப் பயன்படுத்தி அத்துமீறலில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே கனடா, உருகுவே போன்ற நாடுகளில் கஞ்சாவுக்கு சட்ட அனுமதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசியாவிலேயே கஞ்சாவைப் பயன்படுத்த சட்ட பூர்வ அனுமதி வழங்கிய முதல் நாடாக தாய்லாந்து மாறியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading