World

புதிய சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா,விக்னேஷ் சிவன்!

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் நேற்று நடைபெற்றது. திருப்பதியில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி கல்யாண உற்சவத்தில் இன்று கலந்து கொண்டனர். நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவன், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா ஆகியோரின் திருமணம் நேற்று காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவர்களது திருமணத்தில் முன்னணி திரைப் பிரபலங்கள் உள்பட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதற்கிடையே, நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருமணம் முடிந்ததை அடுத்து திருப்பதியில் நடைபெற்ற கல்யாண உற்சவத்தில் இன்று கலந்து கொண்டனர் .

இந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டது. இந்நிலையில், திருப்பதியில் சுவாமி தரிசனத்திற்கு பின் புகைப்படம் எடுத்தபோது காலணிகள் அணிந்து வந்ததால் ஏற்பட்ட சர்ச்சையைஅ தொடர்ந்து, நயன்தாரா மீது திருப்பதி திருமலை தேவஸ்தானம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க முடிவுசெய்துள்ளதாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading