LocalNorth

கடவையில் ரயிலுடன் மோதி சின்னாபின்னமாகியது கார்! – யாழ்.நகர வர்த்தகர் படுகாயம்

யாழ். கந்தர்மடம் இந்து மகளிர் வீதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட கார், ரயிலுடன் மோதியதில் காரில் பயணித்த வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்தார்.

இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் இடம்பெற்றது.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலுடன் கார் மோதியே இந்த விபத்து இடம்பெற்றது.

கந்தர்மடம் இந்து மகளிர் வீதியில் காரில் பயணித்த வர்த்தகர், பாதுகாப்பற்ற ரயில் கடவையைக் கடக்க முற்பட்டுள்ளார். அப்போது எதிரே வந்த ரயில் காரை மோதி கந்தர்மடம் அரசடி வீதிவரை இழுத்துச் சென்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் கார் முற்றுமுழுதாகச் சேதமடைந்ததுடன் காரில் பயணித்த யாழ். நகர வர்த்தகரான பாலச்சந்திரன் (வயது – 63) என்பவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading