Uncategorized

கடித்த பாம்புடன் வைத்தியசாலைக்கு வந்த வாலிபர்!

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த திப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் பூவரசன் (28). விவசாயியான இவர் நேற்று மாலை வீட்டின் அருகில் உள்ள மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்து குப்பைகளை கொட்டச்சென்றார். அப்போது குப்பையில் மறைந்திருந்த பாம்பு பூவரசனை கடித்தது. இதனால் வலியால் துடித்த அவர் கூச்சல்போட்டதை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.

குப்பையில் பதுங்கி இருந்த பாம்பை லாவமாக பிடித்தனர். பின்னர் பாம்பை தண்ணீர் பாட்டிலில் வைத்து எடுத்துக்கொண்டு போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக பூவரசன் தனது தாய் கோமதியுடன் வந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து, ரத்தத்தை பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். கடித்த பாம்பை ஆஸ்பத்திரிக்கு எடுத்து வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது….

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading