Local

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாராளுமன்றம் வந்தார் ரிஷாத் பதியுதீன்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் சற்றுமுன் நாடாளுமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொள்ளவதற்காகவே அவர் அழைத்துவரப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையினால் இரு வாரங்களுக்கு நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என சபாநாயகர் தெரிவித்திருந்த நிலையில், கடும் பாதுகாப்புக்கு மத்தியில் அவர் அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading