Local

கட்டுப்பாட்டு விலை நீக்கம்! பால்மா, சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு?

பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி மேற்படி நான்கு பொருட்களின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியை வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டுப்பாட்டு விலை தளர்த்தப்பட்டாலும் தன்னிச்சையான முறையிலான விலை அதிகரிப்புக்கு இடமளிக்கப்படமாட்டாது என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading