Local

கண்டறியப்பட்ட புதிய தொற்று – இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பல நாடுகளில் பரவி வரும் புதிய கோவிட் 19 திரிபு குறித்து இலங்கை சுகாதார அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணித்து வருவதுடன், உள்ளூர் மக்களைப் பாதுகாப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பரவுவதாகக் கூறப்படும் இந்த புதிய திரிபு “சிகாடா” (Cicada – BA.3.2) என அழைக்கப்படுகிறது. இது முதன்முதலில் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது சர்வதேச சுகாதார அறிக்கைகளின்படி, குறைந்தது 23 நாடுகளில் இந்தத் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது.

புதிய தொற்று பரவும் அபாயம்

அமெரிக்காவில் கடந்த ஆண்டு இறுதியிலிருந்து இந்தத் திரிபுடன் தொடர்புடைய பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

23 நாடுகளில் கண்டறியப்பட்ட புதிய தொற்று - இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | New Infections Detected In 23 Countries

இந்த புதிய திரிபின் அறிகுறிகள் முந்தைய கோவிட் வகைகளில் காணப்பட்ட அறிகுறிகளுக்குச் சமமாகவே இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி,

  • காய்ச்சல் மற்றும் இருமல்
  • தொண்டை வலி
  • மூக்கடைப்பு அல்லது மூக்கு ஒழுகுதல்
  • சோர்வு, தலைவலி மற்றும் தசை வலி
  • மூச்சுத்திணறல்
  • சுவை மற்றும் வாசனை இழப்பு (நபருக்கு நபர் மாறுபடலாம்)

இலங்கை சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

“சர்வதேச ரீதியில் பரவும் எந்தவொரு புதிய திரிபும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். அதனால் இத்தகைய சூழ்நிலைகளை நாம் எப்போதும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். தற்போதைய நிலவரங்களையும் தொடர்ந்து அவதானித்து வருகிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

23 நாடுகளில் கண்டறியப்பட்ட புதிய தொற்று - இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | New Infections Detected In 23 Countries

அதேவேளை, இலங்கையில் அண்மைக்காலமாக இந்தப் புதிய திரிபோ அல்லது வேறு எந்த கோவிட் திரிபுகளோ கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பொதுச் சுகாதாரக் கண்காணிப்பின் ஒரு பகுதியாக தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading