Local

கண்டி முதல் கொழும்பு வரை 5 நாட்கள் ஆர்ப்பாட்ட பேரணி!

ஐக்கிய மக்கள் சக்தி கண்டியில் இருந்து கொழும்பு வரை “சமகி ஜன பாகமன” என்ற பெயரில் எதிர்ப்பு பேரணியை ஏற்பாடு செய்துள்ளது.

5 நாட்கள் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்ட பேரணியானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி கண்டியில் இருந்து ஆரம்பமாகி ஏப்ரல் 30 ஆம் திகதி கொழும்பை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டுத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ, இந்த எதிர்ப்புப் பேரணியானது பின்வரும் 5 கட்டங்களைக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

முதல் கட்டம் – ஏப்ரல் 26 – கண்டி முதல் மாவனெல்லை வரை

2 ஆவது கட்டம் – ஏப்ரல் 27 – மாவனெல்லை முதல் கலிகமுவ வரை

3 ஆவது கட்டம் – ஏப்ரல் 28 கலிகமுவ முதல் தனோவிட்ட வரை

4 ஆவது நிலை – 29 ஏப்ரல் தனோவிட்ட முதல் யக்கல வரை

5 ஆவது கட்டம் – ஏப்ரல் 30 யக்கல முதல் பேலியகொட வரை

“மே 1 ஆம் திகதி கொழும்பில் மாபெரும் மே தின பேரணியுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும்” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading