Local

கண் சிகிச்சையின் உண்மை நிலை,,,ஷிரந்திக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தொடர்பில் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இன்று(08.10.2026) அவர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படவிருந்த நிலையில் அந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலை மருத்துவமனையின் விசேட மருத்துவரிடம் இன்று ஷிரந்தி முன்னிலைப்படுத்தப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையருமான சேனக பலகேவத்த தெரிவித்துள்ளார்.

ஷிரந்திக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து - அம்பலமாகவுள்ள கண் சிகிச்சையின் உண்மை நிலை | Shiranthi To Be Arrested In Government Hospital

அதற்கமைய, ​​அவரை நாளைய தினம் கொழும்பு தேசிய கண் மருத்துவமனையின் விசேட மருத்துவர் ஒருவரின் ஆலோசனையை பெற முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கண் சத்திர சிகிச்சை செய்ததாக காண்பிக்கும் வகையில், நேற்றையதினம் பெரிய பிளாஸ்டருடன் ஷிரந்தி கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் போலியான முறையில் அவர் கண்ணை மறைத்திருந்ததாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் தனியார் வைத்தியசாலைக்கு செல்வதை தவிர்த்து, அரசாங்க வைத்தியசாலைக்கு செல்வதன் மூலம் அதன்  உண்மைத் தன்மை அம்பலமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading